1992 ஆம் ஆண்டு ஆவாரம்பூ என்ற தமிழ் திரைப்படத்தில் சர்க்கரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் வினீத். முதல் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது அறிமுக நடிகருக்கான விருந்துக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்திலும் புதிய முகம், ஜாதிமல்லி, மே மாதம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் பின்பு 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில் 2005 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகிய சந்திரமுகி திரைப்படத்தில் வினீத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
1967 ஆம் ஆண்டு பிறந்த வினித் இவரின் குடும்பம் கேரளாவில் ஒரு பெரிய குடும்பம் ஆகும், வினோத்தின் அம்மா சாந்தகுமாரி ஒரு டாக்டர் அதேபோல் நாட்டிய பேரொளி பத்மினி வினித்திற்கு சொந்தக்காரர்தான் அதனால் சிறுவயதிலிருந்தே பரதநாட்டியத்தில் கை தேர்ந்தவராக வளர்ந்தார், கேரளாவில் இவர் நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நடனமாடி விருதினை வென்றுள்ளார்.
அதனால்தான் சந்திரமுகி திரைப்படத்தில் பரதநாட்டியம் அருமையாக ஆடியுள்ளார், இந்த நிலையில் வினித் இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் டான்ஸ் கோரியோகிராபர் ஆக இருந்துள்ளார், 2004 ஆம் ஆண்டு வினித் பிரிசில்லா மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
இந்தநிலையில் 53 வயதாகும் வினித் இன்னும் இளமையாகவே இருக்கிறார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.