Actor vineeth Wife: 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் வினீத்தின் குடும்ப புகைப்படம் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அப்படி சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய பரதநாட்டிய வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். வினீத் தொடர்ந்து சில வெற்றி திரைப்படங்களை தந்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே சினிமாவில் இருந்து விலகினார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவருடைய குடும்பம் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் வினீத் ஹீரோவாக மட்டுமல்லாமல் பரதநாட்டிய கலைஞராகவும் இருக்கிறார். மேலும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடன இயக்குனராகவும் இருந்துவரும் நிலையில் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
வினீத் ஆவாரம்பூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமான நிலையில் முதல் படத்திலேயே தமிழ்நாட்டின் திரைப்பட நடிகர் சங்கத்தின் சிறந்த புதுமுகம் விருதை பெற்றார். எனவே இந்த படத்தினை தொடர்ந்து ஜாதிமல்லி, காதல் தேசம், சிம்ம ராசி, சுயம்வரம், வேதா, பிரியமான தோழி உள்ளிட்ட தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார்.
இந்த சமயத்தில் தான் திடீரென்று தமிழ் சினிமாவில் இருந்து விலகினார். பிறகு வினீத் கடமை 2004ஆம் ஆண்டு ப்ரிசிலா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். சமீபத்தில் வினீத் தன்னுடைய குடும்பத்தினர்களுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர வைரலாகி வந்தது.