தனது நீண்ட கால காதலியை திருமணம் செய்யப்போகும் நடிகர் வினை.! புகைப்படத்துடன் இதோ.

vinay 1
vinay 1

சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து பிறகு வில்லனாக மாறியவர் தான்  நடிகர் வினய் இவர் தமிழ் திரைப்படங்களில்  பலவற்றிலும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த உன்னாலே உன்னாலே இன்னும் படத்தில் நடிகராக அறிமுகமானவர்தான் வினய்.

முதல் படத்திலேயே நன்கு பிரபலமானார், அப்படத்தில் வரும் ஜூன் போனால் எனும் பாடல் இன்றளவும் ரசிகர்களால் கேட்டு ரசிக்கப்பட்டு வருகிறது.இதை தொடர்ந்து மோதிவிளையாடு,ஜெயம்கொண்டான், ஒன்பதுல குரு ஆகியவற்றில்   ஹீரோவாக நடித்தார். என்றென்றும் புன்னகை எனும் படத்தில் ஜீவா மற்றும் சந்தானத்துடன் இணைந்து நடித்திருந்தார்.

அதன் பிறகு காலப்போக்கில் இவரது படங்கள் அதிகமான வசூலை செய்யவில்லை, ஆகையால் 2017 இல் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் வில்லனாக நடித்திருப்பார் வில்லனாக இருந்தாலும் கச்சிதமாக நடித்திருந்தார். இப்படத்திற்குப் பிறகு மீண்டும் அவர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்திலும், சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.

vinay
vinay

மேலும் தற்பொழுது ஓ மை டாக் என்னும் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தான் சேரனின் ராமன் தேடிய சீதை என்னும் படத்தில் உள்ள மூன்று கதாநாயகிகளில் ஒருவரான விமலா ராமனை திருமணம் செய்யப்போவதாக அறிவித்தார்.இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்,இது அவர்களது ரசிகர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.