சர்வைவர் நிகழ்ச்சியில் தளபதி விஜயை பற்றி பேசி அனைவரையும் நெகிழவைத்த நடிகர் விக்ராந்த்.!

vikranth
vikranth

சினிமா உலகில் வாரிசு நடிகர்களின் மகன்கள் சினிமா உலகில் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய சொந்தக்காரர் களையும் சினிமா உலகில் இழுத்து போடுவதையும் பழக்கமாக வைத்துள்ளனர் ஆனால் ஒரு சிலரோ தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்ளாமல் தனது திறமையின் மூலம் படிப்படியாக அந்த இடத்தை பிடிக்கின்றன.

அப்படி தற்பொழுது பயணித்து வருவர்தான்  நடிகர் விக்ராந்த் விஜய் அவர்களின் நெருங்கிய சொந்தக்காரராக இருந்தாலும் தனது திறமையை நம்பி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் முன்னேறி வருகிறார் இவர் இதுவரையிலும் பாண்டியநாடு, சுட்டு பிடிக்க உத்தரவு, கவண், கெத்து போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் பயணித்துக் கொண்டிருந்த இவர் சமீபகாலமாக பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில் அர்ஜுன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் இதில் அவர் போட்டியாளராக பங்கு பெற்று தற்போது ஓடிக்கொண்டிருக்கிறார் இதில் தனது திறமையை காட்டி மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளார்.

விக்ராந்த். இதில் சிறப்பாக பயத்துடன் கொண்டு இருந்தாலும் அவ்வப்போது தனது குடும்பங்களைப் பற்றி பேசி வருகிறார் அதிலும் குறிப்பாக அவரது அண்ணன் விஜயை பற்றி பல்வேறு நெகிழ்ச்சியான தருணங்களை கூறி வருகிறார் அதில் ஒன்றாக அண்மையில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் நிறைய உதவிகள் விஜய் அண்ணன் செய்துள்ளதாக அவர் கூறி பேசினார்.

ஒரு கட்டத்தில் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத இக்கட்டான காலங்களில் இருந்தோம். அப்போது விஜய் அண்ணா தங்களுக்கு புதிதாக வீடு ஒன்றை வாங்கி தந்து உதவியதாக கூறினார். விஜய் என் அண்ணன் தான் இருப்பினும் இந்த காலகட்டத்தில் யார் இப்படி எல்லாம் செய்வார்கள் ஆனால் விஜய் அண்ணா செய்தார் என கூறினார்.