நோயாளிகளுக்காக நடிகர் விக்ரமின் மறுமகன் செய்த உதவி..! என்னதான் சொல்லுங்க இதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்..!

vikram

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விக்ரம் இவருடைய நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த மாபெரும் வெற்றி கண்டுள்ளது அந்த வகையில் தற்போது இவருக்கு வயது முதிர்ந்தாலும் சரி திரைப் படத்தில் நடிப்பதை மட்டும் நிறுத்தியதே கிடையாது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் தன்னுடைய மகனுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்  இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்து வருகிறாராம்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் அவருடைய குடும்பத்தில் முதல் நடிகராக அவதரித்தார் பின்னர் அவருடைய மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தி உள்ளார் இந்நிலையில் விக்ரமின் குடும்பத்தில் இருந்து மற்றொருவர் சினிமாவில் என்ட்ரி ஆக உள்ளாராம்.

வேறு யாரும் கிடையாது விக்ரமின் மருமகன் தான் இந்நிலையில் இவர் திரைப்படத்தில் நடிப்பதற்காக சுமார் நான்கு ஆண்டுகளாக முடி வளர்த்து கொண்டிருக்கிறாராம்  அந்த வகையில் இத்திரைப்படத்தில் இவருக்கு கொடுக்கும் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது..

இந்நிலையில் நடிகர் விக்ரமின் மருமகன் தனது முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு தானமாக கொடுத்துள்ளார். இவ்வாறு விக்ரம் மருமகன் செய்த உதவியை பார்த்த பலரும் வியந்து போனது மட்டுமல்லாமல் அவரை பாராட்டி வருகிறார்கள்.

manu ranjith-1
manu ranjith-1