தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விக்ரம் ஹீரோவாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். என்னதான் இவர் பல வருடங்களாக சினிமாவில் இருந்து வந்தாலும் பெரிதாக இவருடைய நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் வசூல் ரீதியாக வேற்றுமை பெற வில்லை என்று தான் கூற வேண்டும்.
இப்படிப்பட்ட நிலையில் இவர் தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் இதற்கு முன்பு இவருடைய நடிப்பில் வெளியான மகான், கோப்ரா போன்ற படங்கள் பெரும் தோல்வியினை சந்தித்தது.
இந்நிலையில் தற்பொழுது இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்களான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாள்கள் இணைந்து நடித்துவரும் நிலையில் இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்பொழுது இருவர் கோடிக்கணக்கில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற டாப் நடிகர்களுக்கு மட்டுமே கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்களுக்கு அடுத்ததாக தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளத்தினை பெற்று வரும் நிலையில் டாப் ஹீரோக்களை விட வில்லன் கதாபாத்திரத்திற்கு அதிக சம்பளம் வாங்க விக்ரம் ஆர்வம் காமித்து வருகிறாராம்.
அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்தால் எந்த படமும் ஓடவில்லை என்பதற்காக தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தற்பொழுது தன்னுடைய சம்பளத்தை 30 கோடி வரை உயர்த்தி உள்ளாராம். தற்பொழுது இவர் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படமாவது ரிலீஸ்சாகி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.