இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் முதன்முதலாக வில்லனாக களமிறங்கும் நடிகர் விக்ரம்..! அதிர்ச்சியில் கோலிவுட் வட்டாரம்..!

vikram-2
vikram-2

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தில் கதாநாயகனாக நடித்து பல்வேறு வெற்றியை கொடுத்தவர் அவர்தான் நடிகர் விக்ரம் இவர் சமீபத்தில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவது மட்டுமில்லாமல் தற்போது அவருடைய கைவசம் கோப்ரா துருவநட்சத்திரம் மகான் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்தவகையில் கோப்ரா திரைப்படத்தை அஜய் ஞானமுத்து அவர்கள்தான் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் பின்னணி பணி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அவர் நடிக்கும் துருவநட்சத்திரம் திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வருகிறார்  மேலும் இத்திரைப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருப்பதாக படுகிறது.

மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படமானது  மணிரத்தினத்தின் கனவு திரைப்படம் ஆகும் என்ற திரைப்படத்தில் விக்ரம் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்கள் என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள்.

மேலும் நடிகர் விக்ரம் தன்னுடைய மகனுடன் இணைந்து மகான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் தான் இயக்கி வருகிறார் அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

இதை தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி உடன் கூட்டணி வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ராஜமவுலி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார் இந்த திரைப்படத்தில் வில்லனாக  நடிகர் விக்ரமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

vikram-1