நடிப்பு என்றால் இப்படித்தான் என்ற கோட்பாட்டுக்கு இனங்க நடிகருக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அவர்தான் நடிகர் சிவாஜிகணேசன். அவரை போல ஓரளவு சினிமாவில் கால் தடம் பதித்து பிரபலமானவர் தான் நடிகர் திலகம் பிரபு.
அதன்பிறகு பிரபுவின் மகணும் சிவாஜிகணேசனின் பேரனும் ஆன விக்ரம் பிரபு சினிமாவில் கால்தடம் பதித்தார் ஆனால் இவர் சொல்லும்படி பிரபலமாகவில்லை. ஆனால் ஆரம்பத்தில் திரை உலகில் அறிமுகம் ஆன பொழுது இவர் நடித்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அந்த வகையில் கும்கி திரைப்படமானது இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
இதனைத் தொடர்ந்து இவன் வேற மாதிரி அரிமா நம்பி போன்ற திரைப் படங்களில் இவர் நடித்துள்ளார் என்னதான் இவர் அதன்பிறகு பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் சொல்லும்படி சமீபத்தில் இவருக்கு சரியான திரைப்பட வாய்ப்பு கிடையாது.
இந்நிலையில் விக்ரம் பிரபு மொத்தம் 13 திரைப்படங்களில் தோல்வியை சந்தித்துள்ளார். ஆரம்பத்தில் கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என தேடி தேடி நடித்து வந்த விக்ரம் பிரபு அதன்பிறகு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை திரைப்படம் நடித்தால் போதும் என நடித்துவிட்டார்.
இந்நிலையில் எப்படியாவுது ஒரு திரைப்படமாது ஹிட் கொடுக்கவேண்டும் என எண்ணி இருந்து வரும் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு இன்னும் சரியான திரைப்பட வாய்ப்பு அமையவில்லை இந்நிலையில் விக்ரம் பிரபு பாயும் ஒளி நீ எனக்கு மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களையே நம்பி வருகிறார். ஆகையால் அவருடைய சம்பளமும் 70 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக மாற்றப்பட்டுவிட்டது.