ஹாலிவுட் நடிகரை தட்டி தூக்கிய ‘தங்கலான்’ படக்குழு .! ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் விக்ரம்..

thangalaan

தற்பொழுது நடிகர் விக்ரம் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கைது செய்துள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துவரும் தங்கமான் திரைப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் நிலையில் ஒளிப்பதிவு வேலைகளை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் மேற்கொண்டு வருகின்றனர். பிறகு எஸ்.எஸ் மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்த படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விக்ரமைத் தொடர்ந்து பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் 18ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் இணைந்துள்ளார். எனவே இந்த படத்தின் படப்பிடிப்பின் பொழுது விக்ரம் நடிகர் டேனியல் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தங்களான் படத்தின் ஆடியோ உருவத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது, இதனை அடுத்து ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் நிறைவடைந்து இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vikram
vikram

மேலும் கோலார் தங்க வயல் பகுதியில் நடந்த தங்கலான் படப்பிடிப்பின் பொழுது எடுத்த சூரிய உதயம் மற்றும் அஸ்தமான புகைப்படங்களை நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ளார் இது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.