actor vikram life history: தான் நடிக்கும் திரைப்படத்தில் தனக்கான கதாபாத்திரத்திற்காக தன்னையே மாற்றிக்கொண்டு நடிக்கும் ஒரு நடிகர் தான் விக்ரம் இவர் பல மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் சமீபத்தில் சரியான பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.
நடிகர் விக்ரமின் உண்மையான பெயர் ஜான் கென்னடி வினோத் ராஜ் ஆனால் திரையுலகில் மாடலாக இருக்க வேண்டும் எந்த காரணத்தினால் விக்ரம் என தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார் நடிகர் விக்ரம் ஒரு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் விக்ரமுக்கு சினிமாவில் ஆசை வருவதற்கு அவருடைய தந்தை தான் காரணம் என அவரே கூறியிருப்பார் நடிகர் விக்ரம் லயோலா காலேஜில் பட்டைய படிப்பு முடித்து சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார்.
ஒரு நாள் வீட்டிற்கு செல்லும்போது ஒரு ட்ரக் வந்து அவர் மீது மோதிவிட்டது இதன் காரணமாக அவர் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு விட்டன பின்னர் அவர் சுமார் மூன்று வருடங்களாக மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 23 ஆபரேஷன்கள் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது
அதன் பிறகு எப்படியாவது இந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்ற காரணத்தினால் விளம்பர திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அதன்பிறகு மாடலிங் துறையில் சிறந்து விளங்கியதன் காரணமாக பின்னர் குடும்ப கலாட்டா என்னும் சீரியலில் நடித்துள்ளார்.
இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் முன்னேறி வந்த சியான் விக்ரம்க்கு பண கஷ்டம் மிக அதிகமாக உருவாயின இதன் காரணமாக சில திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் நடிகர் விக்ரம் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு எப்படியாவது கதாநாயகனாக ஆக வேண்டும் என்ற காரணத்தினால் பல இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு அடைந்துள்ளார்.
இதன் விளைவாக சாமுராய் எனும் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்ததன் காரணமாக திரை உலகில் அனைவருக்கும் விக்ரமை அடையாளப்படுத்தியது.
அதன்பிறகு கரடுமுரடான இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது என்னும் திரைப்படத்தில் நடித்தார் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் விக்ரமிற்கு சியான் என்னும் பெயரும் கிடைத்தது மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் பல்வேறு விருதுகளையும் வாங்கிக் கொடுத்தது மட்டுமல்லாமல் இதனை தொடர்ந்து ஜெமினி தூள் சாமி பிதாமகன் அந்நியன் தெய்வத்திருமகள் போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக களமிறங்கி வெற்றி கண்டார்.