மீண்டும் பிரபல இயக்குனரின் சரித்திர படத்தில் இணைந்த நடிகர் விக்ரம்.! ஹீரோயின் தேசிய விருது பெற்றவராம்..

vikram-1
vikram-1

சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். வசூல் ரீதியாக இந்த படம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் நிலையில் உலகம் முழுவதும் வெளியான மூன்றே நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றிருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என ரசிகர்கள் கலவை விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள்.மேலும் இந்த படத்தில் நடித்திருந்த அனைத்து நட்சத்திரங்களும் தங்களுடைய கடின உழைப்பை செலுத்தி இருந்தார்கள் என்பது இந்த படத்தினை பார்க்கும் பொழுது தெரிய வருகிறது.

மேலும் இந்த படம் சூப்பர் ஹிட்டாகியுள்ள நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த விக்ரம் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.‌இதற்காக பலரும் வாழ்த்துக்கள் கூறி வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சரித்திர திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது பாலிவுட் திரைவுலகில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் திரைப்படம் தான் சீதா. ராமாயண காவியத்தில் வரும் சீதாவின் கதை அம்சத்தை கொண்டு மிகவும் பிரம்மாண்டமாக பல கோடி பட்ஜெட்டில் தயாராக இருக்கிறது இந்த படத்தின் சீதா கேரக்டரில் தேசிய விருது பெற்ற கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vikram
vikram

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தான் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த படத்தினை இயக்குனர் அலாவுதீன் தேசாய் என்பவர் இயக்க இருக்கும் நிலையில் சமீபத்தில் விக்ரமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்த பேச்சுவார்த்தை இந்த படத்தின் கதையையும் அவரது கேரக்டரையும் கூறியதாகவும் விக்ரமுக்கு இந்த படத்தின் கதை பிடித்துப் போக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் விக்ரம் இந்த திரைப்படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டாலும் எந்த கேரக்டர் என்பது தெரியவில்லை இப்படிப்பட்ட நிலையில் விக்ரமுடன் இயக்குனர் அலாவுதீன் தேசாய் எடுத்துக் கொண்ட தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.