தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் விக்ரம்..! மிகுந்த மன வருத்தத்தில் ரசிகர்கள்..!

vikram-111
vikram-111

தமிழ் சினிமாவில் திரைப்படத்திற்காக தன்னுடைய கதாபாத்திரம் மட்டுமின்றி  தன்னுடைய உருவத்திலும் மாற்றம் செய்துகொண்டு திரைப்படத்தில் நடிக்கும் ஒரே நடிகர் என்றால் அது விக்ரம் தான்.  அந்த வகையில் நடிகர் விக்ரம் நடிப்பை தன்னுடைய மூச்சாக நினைத்துக் கொண்டு நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் மகான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மட்டும் இன்றி அவருடைய மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவருமே நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் சமீபத்தில் அவர் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நடிகர் விக்ரம் அவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பலர் கூறி வருகிறார்கள் ஆனால் விக்ரமுக்கு சாதாரண காய்ச்சல் தான் என்றும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மிக விரைவில் அவர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ஜ் ஆகி விடுவார் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறு வெளிவந்த தகவல் மூலம் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த மன நிம்மதியை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் நடிகர் விக்ரம் நடித்த மகான் திரைப்படத்தை தொடர்ந்து  மணிரத்தினத்தின் கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் ஆனது இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்ட அதன்  முதல் பாகத்தை இந்த ஆண்டும் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு வெளியிட உள்ளதாக கூறி உள்ளார்கள் இந்நிலையில் திரைப்படத்தின் முதல் பாகத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

vikram-0001
vikram-0001

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விக்ரம் அவர்கள் பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் படபிடிப்பானது  மிக விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.