தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவது மட்டுமில்லாமல் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் தன்னுடைய திறனை வெளிக்காட்டி வருபவர்தான் நடிகர் விக்ரம் இவர் பின்னணி பாடகராக கூட பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். அந்தவகையில் இவர் பாடிய பாடல்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ஸ்ரீ திரைப்படமானது சூர்யா ஜோதிகா காயத்ரி ஜெயராம் ஆகியோருடன் இணைந்து நடித்த திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் தான் முரளிதரன் அந்த வகையில் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற யாமிருக்க பயமேன் என்ற பாடலை சங்கர் மகாதேவன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளார்.
ஜெமினி திரைப்படம் ஆனது சரண் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்து இருப்பார் இவ்வாறு வெளியான இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஓ போடு என்ற பாடலில் நடிகர் விக்ரம் ஸ்ரீராம் அனுராதா ஆகியோருடன் இணைந்து பாடி உள்ளார்கள்.
கந்தசாமி திரைப்படமானது சுசிகணேசன் இயக்கத்தில் விக்ரம் ஸ்ரேயா ஆகியோர்கள் நடிப்பில் வெளியான திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி, இதெல்லாம் டூப்பு, மியாவ் மியாவ், மேம் போ மாமியா, ஆகிய நான்கு பாடல்களையும் விக்ரம்தான் பாடியுள்ளார்.
மதராசபட்டினம் ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் ஆர்யா எமி ஜாக்சன் நாசர் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற மேகமே ஓ மேகமே என்ற பாடலை விசுவநாதன் நாசர் விக்ரம் ஆகியோருடன் இணைந்து பாடி உள்ளார்கள்.
தெய்வ திருமகள் திரைப்படத்தில் பாப்பா பாப்பா என்ற பாடலை விக்ரம் தான் பாடி உள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜபாட்டை திரைப்படத்தில் இடம்பெற்ற லட்டு லட்டு என்ற பாடலையும் நடிகர் விக்ரம் தான் பாடி உள்ளார்.
இதனைத்தொடர்ந்து டேவிட் திரைப்படத்தில் மரிய பிடசே, மற்றும் கடரம் கொண்டன் திரைப்படத்தில் தீச்சுடர் குனியமா என்ற பாடலை நடிகர் விக்ரம் தான் பாடி உள்ளார் பொதுவாக விக்ரம் தான் நடிக்கும் திரைப்படத்தில் ஏதேனும் ஒரு பாடலையாவது பாடி தன்னுடைய குரலை ரசிகர்களிடையே கொண்டு சென்று விடுகிறார்.