படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து.? நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிவு.. சோகத்தில் ரசிகர்கள்

vikram
vikram

நடிப்பிற்கு பெயர்போன நடிகர் விக்ரம் தொடர்ந்து வித்தியாசமான கதைகள் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் இருப்பினும் கடைசியாக இவர் நடித்த கோப்ரா, மகான் போன்ற படங்கள் இவருக்கு மோசமான விமர்சனத்தை பெற்று தந்தது. இதிலிருந்து மீண்டு வர விக்ரம் மணிரத்தினதுடன் கைகோர்த்து பொன்னியின் செல்வன் 1,2 போன்ற படங்களில் ஆதித்த கரிகாலன்..

கதாபாத்திரத்தில் நடித்து வெற்றிகளை அள்ளினார். அதனைத் தொடர்ந்து பா. ரஞ்சித்துடன் இணைந்து தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் நிச்சயம் விக்ரமுக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் தங்க சுரங்கத்தை பற்றி இந்த படம் பெரிய அளவில் பேசப்பட இருக்கிறது.

மேலும் விக்ரம் வித்தியாசமான லுக்கில் நடித்து வருகிறார் படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிகை  மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டார். தொடங்குவதற்கு முன்பு நடைபெற்ற ஒத்திகையின் போது நடிகர் விக்ரம் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவரது விலா எலும்பு முறிந்தது இதனை எடுத்து பதறிப்போன பட குழுவினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்க அறிவுறுத்தி உள்ளார்கள்.

இதனால் நடிகர் விக்ரம் குணமாகும் வரை தங்கலான் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்க மாட்டார் என அவரது மேலாளர் தெரிவித்துள்ளார் இந்த தகவல் தற்பொழுது விக்ரம் ரசிகர்களை சோகத்தில் அழுத்தி உள்ளது. விக்ரம் வெகு விரைவிலேயே மீண்டு வரவேண்டும் என பிராத்தனை செய்தும் வருகின்றனர்.