மீண்டும் கௌதம் மேனனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த நடிகர் விக்ரம்..! இந்த வாட்டி விட்டா அப்புறம் பிடிக்கவே முடியாது..!

vikram-011
vikram-011

தமிழ் சினிமாவில் தான் நடிக்கும் திரைப்படத்திற்காகவே தன்னை மாற்றிக்கொண்டு நடிக்கும் ஒரு நடிகர் என்றால் அது நடிகர் விக்ரம் தான் இவர் தன்னுடைய உடலை தன்னுடைய கேரக்டருக்கு ஏற்றவாறு வருத்திக் கொள்வது மட்டும் இல்லாமல் படத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து விட்டார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பது ஒரு வரம் என்றே கூறிவருகிறார்கள் ஆனால் சமீபத்தில் சீயான் விக்ரமின் திரைப்படங்கள் எதுவுமே வெளிவராமல் இருந்து வருகிறது அந்த வகையில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான கடாரம் கொண்டான் என்ற திரைப்படம் ஆனது நல்ல வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் கோப்ரா மற்றும் மகான் ஆகிய திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வருகிறார் இதில் விக்ரம் நடிக்கும் மகன் திரைப்படத்தில் அவருடைய மகனும் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல கோப்ரா திரை படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பல வேடங்களில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளார்.

மேலும் நடிகர் விக்ரம் கௌதம் மேனன் கூட்டணியில் நீண்டகாலமாக படப்பிடிப்பில் இருந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில காட்சிகள் இருக்கிறதாம் இந்நிலையில் கோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து இந்த திரைப்படத்தை முடிக்க உள்ளதாக விக்ரம் முடிவு செய்துள்ளாராம்.

ஆனால் இதற்கு கௌதம் மேனன் ஒத்துழைத்தால் மட்டுமே இந்த திரைப்படத்தை முடிக்க முடியும் இந்த வாய்ப்பை மட்டும் கௌதம் மேனன் நழுவவிட்டு விட்டால் பிறகு விக்ரம் கால் சீட் கிடைக்காமல் இந்த திரைப்படம் கிடப்பில் கிடந்த விடும் என கூறப்படுகிறது ஏனெனில் தற்சமயம் விக்ரம் பிரமாண்ட இயக்குனரின் திரைப் படத்தில் கமிட்டாகி உள்ளது இதற்கு காரணம்.