பல கெட்டப் போடும் விக்ரம் தற்பொழுது தாத்தாவானார். !! உச்சகட்ட மகிழ்ச்சியில் விக்ரம்..

vikram-latest
vikram-latest

actor vikram become grandpa: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் நடிகர் விக்ரமும் ஒருவர். இவர் சினிமாவிற்க்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார் என்று கூட கூறலாம். ஏனென்றால் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதனால் இவர் தற்பொழுது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோபுரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், விக்ரமுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்.

விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேபோல் மகள் அக்ஷிதா இவர் 2017 ஆம் ஆண்டு மனோ ரஞ்சித் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விக்ரம் மகள் ஏற்கனவே கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியானது இந்த நிலையில் அவருக்கு தற்ப்பொழுது பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதனால் விக்ரம் தாத்தா ஆகியுள்ளார் இந்த தகவல் விக்ரம் குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.