தன்னுடைய வீட்டில் பணியாற்றும் ஊழியரின் மகன் திருமணத்தில் கலந்துக்கொண்ட நடிகர் விக்ரம்.!

vikram actor

திரைவுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விக்ரம் தொடர்ந்து தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையினால் வித்தியாசமான கதாபாத்திரமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம்.

இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று வெளியாக உள்ள நிலையில் இதனைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 61 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். பொதுவாக சீயான் விக்ரம் ரசிகர்களின் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் தான் ஒளிமாறன். இவரைத் தொடர்ந்து இவருடைய மனைவியும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் விக்ரமின் வீட்டில் பணியாற்றி வருகிறார்.

vikram 1
vikram 1

இப்படிப்பட்ட நிலையில் இவர்களது மகனான தீபக் என்பவருக்கு மணமகள் வர்ஷினி என்பவருடன் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. எனவே திருப்பேரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக் வர்ஷினி இவர்களுடைய திருமணத்தில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். மேலும் விக்ரமின் ரசிகர்களும் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

vikram 2

இவ்வாறு சியான் விக்ரம் தன்னுடைய வீட்டில் பணியாற்றுபவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது ஏனென்றால் பெரும்பாலும் இதுபோன்ற எந்த ஒரு பிரபல நடிகரும் செய்ய மாட்டார்கள் இவ்வாறு முதன்முறையாக விக்ரம் செய்தது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.