எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்.. விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.

vijaysethupathi
vijaysethupathi

தமிழ் சினிமாவில் உள்ள ஒவ்வொரு ஹீரோவுக்கும் இருக்கும் ஆசை என்னவென்றால் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் ஆனால் விஜய் சேதுபதி அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் விஜய் சேதுபதி இடையில் இருக்கும் ஒரு வெற்றிடத்தை நிரப்பி வருகிறார். டாப் நடிகர்கள் எப்பொழுதும் ஹீரோவாக மட்டுமே நடிப்பார்கள்.

ஆனால் இடையில் இருக்கும் ஹீரோ வில்லன் ஆகவும் நடிக்கலாம் ஹீரோவாகவும் நடிக்கலாம் அதை தான் விஜய் சேதுபதி தொடர்ந்து செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். மேலும் பட வாய்ப்புகளும் அவருக்கு குவிந்த வண்ணமே இருக்கின்றன. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி படங்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கின்றன

அந்த வகையில் கமலின் விக்ரம் திரைப்படத்தில் சந்தானம் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து அசத்தினார் அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த டிஎஸ்பி திரைப்படம் அண்மையில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சூப்பராக ஓடியது. இப்போது விஜய் சேதுபதி பல்வேறு படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

குறிப்பாக பாலிவுட் பாஷா ஷாருக்கான் உடன் கைகோர்த்து ஜவான் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இது தவிர ஹிந்தியில் உருவாகும் கிறிஸ்மஸ் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் ஜொலிக்கும் விஜய் சேதுபதியின் உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது இதை ஒரு பக்கம் விமர்சிக்க அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில்..

திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் உடல் எடையை குறைத்து செம்ம ஒல்லியாக மாறிய புகைப்படம் அண்மையில் வெளிவந்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது அதனைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் சேதுபதி செம்ம மாஸ் ஆக இருக்கும் சில புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களுக்கு மேலும் மேலும் அதிர்ச்சி கொடுத்துள்ளது இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

vijaysethupathi
vijaysethupathi