தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டு கொடுத்தா திரைப்படம்தான் 96. இதுவரை வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் ரசிகர்களின் பள்ளி பருவ காதல் நினைவூட்டி விட்டது.
இவ்வாறு இந்த திரைப்படம் வெளிவந்தததன் பிறகாக பல்வேறு ரசிகர்களும் தன்னுடைய முதல் பள்ளி பருவ காதலியை நினைவூட்டியது மட்டுமில்லாமல் அவர்களுக்கு ஒரு மெசேஜ் அல்லது கால் செய்ய தூண்டி விட்டதாக கூறப்படுகிறது.
இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்தது மட்டுமல்லாமல் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பார். இவ்வாறு தமிழில் வெளியாகிய திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது தெலுங்கில் ஜானு என்ற பெயரில் வெளியாகின.
ஆனால் இந்த ரீமேக்கில் கதாநாயகனாக சர்வானந்த் மற்றும் கதாநாயகியாக சமந்தா நடித்திருந்தார் மேலும் தற்போது இத் திரைப்படமானது தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அஜய் கபூர் நடிக்க இருப்பதாகவும். மற்ற கதாபாத்திரத்திற்காக நாயகிகளை தேடிக்கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இவ்வாறு தேர்வு செய்ததன் பிறகு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகிறது.
இப்படமானது இந்தி ரசிகர்களுக்கு ஏற்றவாறு இத்திரைப்படத்தில் ஒரு சில மாற்றங்களை செய்யப்போவதாக மேலும் இத்திரைப்படத்துக்கு பாடல்கள் கூட மிக சிறப்பாக ஆக்குவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். இவ்வாறு லீக்கான செய்தியை பார்த்து நாம் விஜய் சேதுபதி நடித்த படத்திற்கு இவ்வளவு மார்க்கெட்டா என ஆச்சரியத்தில் உள்ளார்கள்.