தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது ஆனால் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி நடை போட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வாரிசு படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள் ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
வாரிசு படத்துடன் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியானது இதனால் இந்த இரண்டு படத்தில் எந்த படம் வெற்றி அடையும் என்று ரசிகர்கள் இரண்டு படத்திற்கு மேல் எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். இரண்டு படமும் வெளியாகி ரசிகர் மதியம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது இந்த நிலையில் நடிகர் விஜயின் சொத்து மதிப்பு குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது நடிகர் விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்திற்காக 150 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நடிகர் விஜயின் முழு சொத்து மதிப்பு 450 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது மேலும் விஜயின் வருட வருமானம் 120 கோடி உள்ளதாகவும் இதனை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க நடிகர் விஜய் அவர்கள் இன்னும் அதிகமாக சம்பளத்தை உயர்த்த உள்ளதால் அவருடைய சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்திற்காக நடிகர் விஜய் அவர்கள் 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. பூஜை தொடங்கப்பட்ட நிலையில் தளபதி 67 திரைப்படம் குறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.