அரசியலுக்கு விஜய் வருவதால் ஏற்பட போகும் மிகப்பெரிய நஷ்டம்.! தமிழ் திரை உலகின் நிலைமை தான் என்ன..?

actor vijay
actor vijay

Actor Vijay: கோலிவுட்டில் டாப் ஹீரோவாக ஜொலித்து வரும் தளபதி விஜய் தற்பொழுது அரசியலுக்கு சென்று இருக்கும் நிலையில் இதனால் சினிமா இண்டஸ்ட்ரிக்கு தான் பெரிய நஷ்டம் என பிரபல அரசியல் பிரமுகர் பேட்டியளித்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் தற்பொழுது தி கோட் என்ற திரைப்படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து தனது 69வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படங்கள் நிறைவடைந்த உடன் முழுவதுமாக அரசியலில் ஈடுபட இருக்கிறார். இவ்வாறு சினிமாவில் இருந்து விஜய் விலகுவதால் சினிமா இண்டஸ்ட்ரிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட இருப்பதாக அரசியல் பிரமுகர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

அயலான் முதல் கேப்டன் மில்லர் வரை இந்த வாரம் OTT யில் வெளியாகும் திரைப்படங்கள்…

அதாவது ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் தளபதி விஜய் இரண்டு வருஷத்திற்கு நான்கு படங்களில் நடித்தால் கூட 600 கோடிக்கு மேல் அவருக்கு சம்பளம் வரும் இப்பொழுது அவர் அரசியலுக்கு போனாலும் அவருக்கு தான் ஹெவி லாஸ். மக்களுக்காக பல கோடிகளை தியாகம் செய்ய தயாராகிவிட்டார்.

இதனால் அவருக்கு மட்டும் இழப்பல்ல அவர் அரசியலுக்கு போவது திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பெரிய நஷ்டம் ஏற்படும் ஏனென்றால் திருப்பூர், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி என பல இடங்களில் விஜய் படத்தை போட்டு தான் லாபம் பார்த்து வருகின்றனர். அதோடு பெரும்பாலும் தற்போது வெளியாகும் திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.

இரும்புக்கை மாயாவி முதல் அருவா வரை.. பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட சூர்யாவின் 5 திரைப்படங்கள்…!

எனவே சினிமாவை விட்டு அவர் செல்வதால் பெருத்தடி வாங்கும் அதே சமயம் 600 கோடியை அசால்ட் ஆக சம்பாதிக்கும் விஜய் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் பணியாற்றுவதற்காக செல்வது பெரிய விஷயம். வரும் 2026ஆம் ஆண்டு அவர் புதிதாக துவங்கிய தமிழக வெற்றி கழகம் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராகவும் போட்டியிட தயாராகி விட்டார். இருந்தாலும் அவர் சினிமாவை விட்டு முழு அரசியல்வாதியாக மாறுவதால் திரைவுலகம் ஆட்டம் காண போவதாக தெரிவித்துள்ளார்.