பல வருடம் ஆனாலும் அடிகடி தூசி தட்டி பார்க்கப்படும் விஜயகுமாரின் ஐந்து மெகாஹிட் திரைப்படங்கள் இதோ..!

vijayakumar
vijayakumar

actor vijaykumar super hit movies: தமிழில் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் விஜயகுமார். இவர் கிட்டத்தட்ட 100 திரைப்படங்களுக்கு மேலாக துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜயகுமார் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தையும் தன்னுடைய கதாபாத்திரத்தை வித்தியாசமாக காட்டியிருப்பார்.

மேலும் நடிகர் விஜயகுமார் நடித்த திரைப்படங்களை இன்றுகூட ரசிகர்கள் விரும்பி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனெனில் அவருடைய கம்பீரமான பேச்சும் சிறந்த நடிப்புத் திறனும் என்றும் ரசிகர் மனதில் மறவாமல் அமைந்துவிட்டது.

தமிழ் திரை உலகில் விஜய் மற்றும் விஜயகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் தான் செந்தூரப்பாண்டி.  இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் மற்றும் விஜய்க்கு தந்தையாக நடித்துள்ளார். தளபதி விஜய் இன்று பெரிய அழகாக இருப்பதற்கு விஜயகாந்த் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார் அதே போல தான் விஜயகுமாரும் ஏனெனில் இந்த திரைப்படத்தில் அவருடைய நடிப்புக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது.

செந்தூரபாண்டி திரைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!

அதன்பிறகு நாட்டாமை திரைப்படத்தில் சரத்குமாருக்கு தந்தையாக நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் குஷ்பு மீனா போன்ற பல்வேறு பிரபலமான நடிகைகள் நடித்துள்ளார்கள்.  என்னதான் இந்த திரைப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து இருந்தாலும் விஜயகுமாரின் பேச்சு மற்றும் நடிப்பு திறன் அனைவரையும் அதிர வைத்தது. இத்திரைப்படம் இன்றும் ரசிகர்களால் பெரிதும் மறக்க முடியாத திரைப் படமாக அமைந்து வருகிறது.

நாட்டாமை திரைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!

இதை தொடர்ந்து ரஜினியின் நடிப்பில் வெளிவந்த பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிக்கு தந்தையாக விஜயகுமார் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ரஜினியை காப்பாற்ற ரகுவரனிடம் விஜயகுமார் பேசும் வசனங்கள் இன்றும் ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்து வருகிறார்கள்.

பாட்ஷா திரைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!

அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும் இவருக்கு தந்தையாக நடித்தவர்தான் விஜயகுமார்.  முதலில் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் செய்கை பிடிக்காத விஜயகுமார் பின்னர் அவருக்குக் கைகொடுப்பது மாபெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

முதல்வன் திரைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!

வின்னர் திரைப்படமானது சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் பிரசாந்த் வடிவேலு போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள் மேலும் இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியைப் பெற்று தந்தது மேலும் இந்த திரைப்படத்தில் வடிவேலு இடம்பெற்றிருக்கும் காமெடியானது இன்றும் பிரபலமாக பார்க்கப்பட்டு வருகிறது.

வின்னர் திரைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!