Vijayakanth Birthday: கேப்டன் விஜயகாந்த் இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவர் குறித்த ஏராளமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்றவர்கள் கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கும் பொழுது சினிமாவிற்கு அறிமுகமான விஜயகாந்துக்கு சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி இளமை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான இவர் இதனைத் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முயன்றார். அப்படி ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைக்க இருந்தாலும் இவர் நடித்த திரைப்படங்கள் ஹிட் ஆகவில்லை.
இந்த நிலைமையில் தூரத்து இடி முழக்கம் என்ற ஹீரோவாக நடித்திருந்தார் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றியினை பெற்றது. எனவே தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ரஜினி, கமலுக்கு இணையாக சினிமாவில் வளர்ந்தார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் உருவானது.
இவ்வாறு விஜயகாந்த் சினிமாவில் வளர்ந்த பிறகு தான் பட்ட கஷ்டத்தை வேறு யாரும் படக்கூடாது என்பதற்காக தன்னால் முடிந்த உதவிகளை அனைவருக்கும் செய்ய ஆரம்பித்தாராம். இந்த சூழ்நிலையில் நடிகர் நடிகராக மட்டுமல்லாமல் சங்க தலைவராகவும் பொறுப்பேற்றார். அப்படி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் வாங்கிய கடனை அடைத்து வருமானத்தையும் அதிகரித்தார்.
தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த விஜயகாந்த் அரசியலிலும் ஈடுபட ஆரம்பித்தார். அப்படி கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேரும் அடுத்ததாக விஜயகாந்த் தனது அரசியலை நிலை நாட்டினார். இவ்வாறு விஜயகாந்த் தனது 71வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவர் விஜய்க்கு செய்த உதவியும், அட்வைஸ் செய்யும் குறித்து பார்க்கலாம்.
அதாவது, விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரம், விஜயகாந்த் இருவரும் 17 திரைப்படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். எனவே எஸ்.ஏ.சி மீது ரொம்பவும் மரியாதையாக இருப்பவர் விஜயகாந்த் விஜய் வைத்து எஸ்.ஏ.சி எடுத்த நாளைய தீர்ப்பு படம் படு தோல்வியினை சந்தித்தது. எனவே விஜயகாநதுடன் நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்தி இருக்கிறார்.
இதனை விஜயகாந்திடம் சொல்ல எஸ்.ஏ.சி போன் அடித்து வீட்டுக்கு வரேன் விஜி என சொல்லி இருக்கிறார் ஆனால் விஜயகாந்த் உடனே எஸ்.ஏ.சிவீட்டிற்கு சென்று இருக்கிறார். வந்ததும் விஷயத்தை கூற விஜயகாந்த் கண்டிப்பாக நடிக்கிறேன் எனக்கு சம்பளம் எதுவும் வேண்டாம் தம்பி முதல்ல நடிக்கட்டும் எனக் கூறியிருக்கிறார். எனவே செந்தூரப்பாண்டி படத்துக்காக மொத்தம் 20 நாட்கள் கால்சீட் கேட்டாராம் சந்திரசேகர் ஆனால் விஜயகாந்த் 17 நாட்கள் தான் நடிக்க முடிந்ததாம் இருந்தாலும் 17 நாட்களும் முழு அர்ப்பணிப்புடன் நடித்தாராம்.
பிறகு ஒரு ஆக்ஷன் காட்சியில் விஜய்யை கொஞ்சம் ரிஸ்க் எடுப்பது போல் தோன்றியவுடன் நேரடியாக விஜய்யிடம் சென்று விஜயகாந்த் ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிற இப்போதான் வளர்ந்து வர ரிஸ்க் எடுக்க வேணாம்னு சொல்லல அதை கவனமா செய்யனும் என்று சொன்னாராம். விஜய் மட்டுமல்லாமல் சூர்யா போன்ற நடிகர்களுடனும் விஜயகாந்த் நடித்திருக்கிறார். இவ்வாறு நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் விஜயகாந்த் தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார்.