Actor Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் ஒரே ஆண்டில் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வரலாற்று சாதனை புரிந்தவராக திகழ்கிறார். வசதியான குடும்பத்தில் பிறந்த விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசையினால் தனது நெருங்கிய நண்பர் இப்ராஹிம் சாவுத்தருடன் சென்னை வந்தார்.
சினிமாவில் நடிக்க முயற்சி செய்ய 1979ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான விஜயகாந்த் இந்த படம் சொல்லும் அளவிற்கு வெற்றிபெறவில்லை என்றாலும் அடுத்ததாக இவர் நடித்த அகல் விளக்கு, நீரோட்டம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றினை பெற்றது.
விஜயகாந்த் இறப்பிற்கு காரணம் இதுதானா… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..
இதன் மூலம் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்ற விஜயகாந்த் சட்டம் ஒரு இருட்டறை, வெற்றி நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள், நானே ராஜா நானே மந்திரி, எங்கள் குரல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவ்வாறு திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்த விஜயகாந்த் கடைசியாக 2015ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இவ்வாறு விஜயகாந்த் ஒரு ஆண்டிற்கு பத்து படங்களில் கூட நடித்திருக்கிறார் அந்த வகையில் தனது சினிமா வாழ்க்கையில் மொத்தமாக 157 படங்களில் நடித்து ரசிகர்களின் பேரன்பையும் ஆதரவையும் பெற்ற கேப்டன் விஜயகாந்த் 1984ஆம் ஆண்டு மட்டும் 18 தமிழ் திரைப்படங்களில் நடித்து சினிமா துறையில் வரலாற்று சாதனை புரிந்தவராக விளங்குகிறார்.
71 வயதில் காலமான விஜயகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஏலம் போன பிரம்மாண்ட மாளிகை..
இவ்வாறு சினிமாவில் வெற்றினை கண்ட விஜயகாந்த் அரசியல் ஈடுபட மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தாலும் ஒரு கட்டத்தில் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டார். எனவே அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட விஜயகாந்த் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார் ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் இந்த செய்தி தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.