சமூக வலைதளத்தை பயன்படுத்தி சாதாரண பொதுமக்கள் கூட பிரபலம் அடைந்து விடுகிறார்கள் அதுமட்டுமில்லாமல் அப்படி பிரபலம் அடைவதால் ஒரு சிலருக்கு பட வாய்ப்பு கிடைத்து வருகிறது அதனால் பல மக்கள் சமூக வலைத்தளத்தில் வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள்.
அப்படி டிக்டாக்கில் வீடியோவை பதிவிட்டு பிரபலம் அடைந்தவர்களில் ஜிபி முத்துவும் ஒருவர். இவர் பேச்சுக்கே தனி ரசிகர் பட்டாளம் இருந்துவருகிறது. இவர் பேசும் பொழுது அடிக்கடி செத்த பயலே நாறப் பயலே என கொச்சையாக பேசுவார்.
டிக் டாக் செயலியை இந்தியாவிலிருந்து முடக்கி உள்ளார்கள் அதனால் பல டிக் டாக் நலன்விரும்பிகள் இன்ஸ்டாகிராமில் தங்களுடைய வீடியோக்களை பதிவிட ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் டிக் டாக் செயலியில் பிரபலமடைந்த ஜிபி முத்துவும் இன்ஸ்டாகிராமில் வந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அவர் தற்பொழுது விஜயகாந்த் வீட்டின் முன்பு நின்று கொண்டு செல்பி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் நான் யாரு வீட்டு முன்பு நிற்கிறேன் என தெரிகிறதா என கூறி வீட்டை வீடியோ மூலம் காட்டி உள்ளார்.
இந்த வீடியோ ரசிகர்களிடம் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில் நான் விஜயகாந்த் அண்ணாச்சியை பார்க்க முடியவில்லை அதனால் அவர் வீட்டை பார்த்து விட்டேன் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
GpMuthu In Front Of #vijayakanth house pic.twitter.com/V0fJDURGcb
— shobi (@shobana40502466) February 18, 2021