மக்களின் நாயகன் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்தை அடக்கம் செய்யப்படும் இடம் இதுதானா.. இதோ முழு விவரம்

captain vijayakanth death 1
captain vijayakanth death 1

Captain Vijayakanth Death: நடிகர் விஜயகாந்த் தனது 71 வயதில் உடல் நலக்குறைவினால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்திருக்கும் நிலையில் இவரை அடக்கம் செய்யும் இடம், நேரம் குறித்த விவரம் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை நுரையீரல் அலர்ஜி ஏற்பட்ட மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டதுm

மேலும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுக்க ஒரு கட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு இந்த தகவல் தமிழகம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனக்குன்னு நீங்க ஒரு இடம் கொடுப்பீங்கில்ல அது போதும்.. கண்ணீரை வரவழைக்கும் விஜயகாந்தின் பழைய வீடியோ..

இந்நிலையில் மியாட் மருத்துவமனையில் இருந்து இவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு வீட்டின் வாசலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான திரைவுலகைச் சேர்ந்த அவரது நண்பர்கள், தொண்டர்கள், உறவினர்கள் என பலரும் நேராக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 4:45 மணியளவில் விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வரை விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.

இந்த விளம்பரத்தில் நடிக்க ஒரு கோடி கொடுத்தும் மயங்காத விஜயகாந்த்.. மக்கள் நலனுக்காக நிஜ வாழ்க்கையிலும் கருப்பு எம்ஜிஆர் தான்.

எந்த வித்தியாசமும் பார்க்காமல் அனைவருக்கும் ஓடி ஓடி உதவி செய்யும் சொக்கத்தங்கம் தான் விஜயகாந்த். இவ்வாறு இப்படிப்பட்ட ஒரு சொக்க தங்கத்தை தமிழகம் இழந்துவிட்டது என்பது அனைவரையும் வருத்தமடைய செய்கிறது. ஏராளமான அரசியல் பிரபலங்கள் விஜயகாந்தின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.