பிரப நடிகரான விஜயின் மனைவி சங்கீதா பிரபல நடிகர், நடிகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ள நிலையில் அதற்கு லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
மேலும் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகிறது. இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று இருந்தாலும் விமர்சன ரீதியாக தோல்வியினை பெற்றது.
இந்நிலையில் தற்பொழுது இவர் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் என்று வெளியாகும் எனவும் படக் குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் இணைய உள்ளார். மேலும் இவர்கள் இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்பொழுது இவர்களுக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா ஷா என இரு பிள்ளைகள் உள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா பிரபல நடிகர் பிரபு மற்றும் நடிகை ராதிகா இருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.