நடிகர் விஜய், அவரது படத்தில் அவரே பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாடல்கள் .! வீடியோ இதோ!!

Actor Vijay sings a song on his movie: தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். சிறந்த நடிப்பு, நடனம் மற்றும் பாடல் என பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர்களில் ஒருவர் தளபதி விஜய் என்பது நாம் அறிந்ததே. அதுபோல அவர் பாடகராக பல பாடல்களைப் பாடியுள்ளார். அந்த வகையில் அவர் பாடிய பாடல்கள் சிலவற்றை இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

1.பத்ரி.

2001ஆம் ஆண்டு இசையில் வெளிவந்த திரைப்படம் பத்ரி. இத்திரைப்படத்தை பிஏ அருண்பிரசாத் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தில் பூமிகா, சாவ்லா, மோனால், விவேக், ரியாஸ்கான் போன்ற பலர் நடித்திருந்தனர். இப்படம் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக அமைந்ததே. இப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது என்பது குறிபிடத்தக்கது. அதிலும் விஜய் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது என்பது குறிப்பிடதக்கது. அதில் அவர் என்னோட லைலா என்ற பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2.தமிழன்.

இந்தி சினிமாவின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவுடன் விஜய் அவர்கள் இணைந்து 2002 ஆம் ஆண்டில் தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை மஜீத் இயக்கியிருந்தார். படம் யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய ஹிட் அடித்ததோடு மட்டுமல்லாமல், அவருக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவர் உள்ளத்தை கிள்ளாதே என்ற பாடலைப் பாடி பெண் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் விஜய்.

3.பகவதி.

விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்சன் திரைப்படம் பகவதி. இப்படம் முழுக்க ஆக்ஷன் ஓரியண்டடாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் அவர்கள் இதற்கு முன்பு காதல் மற்றும் ரொமாண்டிக் போன்ற படங்களை நடித்திருந்த நிலையில் இதுவே அவருக்கு ஆக்ஷனும் கலந்த முதல் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தில் அவர் கொக்கோகோலா என்ற பாடலை பாடி அசத்தினார்.

5.துப்பாக்கி.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய் அவர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பெரிய வசூல் படமாக மாற்றி தந்தார். இப்படத்தில் காஜல் அகர்வால் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவர் கூகுள் கூகுள் என்ற பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் அனைவரின் மத்தியிலும் பிரபலமடைந்தது.

6.ஜில்லா.

விஜய் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜில்லா. இப்படத்தில் மோகன்லால், காஜல், பூர்ணிமா பாக்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் விஜய் அவர்கள் கண்டாங்கி கண்டாங்கி என்றால் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

7.கத்தி.

2014-ம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த திரைப்படம் கத்தி. இத்திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் இவர்கள் இரண்டு கதாபாத்திரத்தில் தனது தத்துவ மான நடிப்பை வெளிகாட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மிகப்பெரிய வசூல் செய்தது இந்த படத்தில் செல்பி புள்ள என்ற பாடலை பாடியிருந்தார்.

8. புலி.

யாரும் எதிர்பார்க்காத வகையில் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து அவர் நடித்த திரைப்படம் புலி. இத்திரைப்படத்தில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் காமெடி கலந்த திரைப்படமாக உருமாறுகிறது. இத்திரைப்படத்தில் ஸ்ரீதேவி, ஹன்சிகா மோத்வானி, சுருதிகாசன், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவர் ஏண்டி ஏண்டி என்ற பாடலை பாடியிருந்தார்.

9.பைரவா.

அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் பைரவா என்ற திரைப்படத்தையும் இயக்கியனார். இப்படத்தில் கீர்த்திசுரேஷ், ஜெகதி பாபு, டேனியல் பாலாஜி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் பாப்பா பாப்பா என்ற  பாடலை பாடியிருந்தார்.

10.பிகில்.

அட்லி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பிகில். இத்திரைப்படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது. இத்திரைப்படம் சுமார் 300கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் வெறித்தனம் பாடலை பாடியிருந்தார்.

11.மாஸ்டர்.

இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் இன்னும் திரையரங்குகளுக்கு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவர் குட்டி ஸ்டோரி என்ற பாடலை பாடியுள்ளார் பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவிவருகிறது.

12.தெறி .

அதிரடி, காதல் திரைப்படமாக அமைந்தத படம் தெறி விஜய் அவர்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. இததை அடுத்து அவர் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மகேந்திரன் அவர்கள் நடித்திருந்தார். மேலும் பிரபு, சமந்தா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவர் செல்லகுட்டி என்ற பாடலை பாடி சிறப்பித்தார் விஜய்.

13.சச்சின்.

மகேந்திரன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சச்சின். இப்படத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் போன்ற பலர் நடித்திருந்தனர். இப்படம் காதல், நகைச்சுவை கொண்ட படமாக அமைந்தது. இப்படம் குடும்ப பாடமாக அமைந்தது இதனால் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.இப்படத்தில் வாடி வாடி என்ற பாடலை பாடியிருந்தார்.

14.நிலவே வா.

ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நிலவே வா. இப்படம் ஆக்ஷன் காதல் கலந்த திரைப்படமாக அமைந்தது. இத்திரைபடத்தில் விஜய் அவர்கள் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிபிடத்தக்கது. இப்படத்தில் சுவலட்சுமி, சார்லி சங்கவி மற்றும் பலர் நடித்திருந்தனர் என்பது குறிபிடத்தக்கது. இப்படத்தில் அவர் நிலவே வா என்ற பாடலை பாடி இருந்தார்.