நடிகர் விஜய்க்கு காமெடி நிறைந்த வில்லன் கதாபத்திரத்தில் நடிக்க தான் ஆசையாம்.! அவரே கூறிய தகவல்.

vijay

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி பட்டிதொட்டி எஙகும் பிரபலம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார் தளபதி விஜய்.

சமீபகாலமாக இவர் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த  கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் சமீபகாலமாக மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்து தோடு மட்டுமல்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்கள் ரசிக்கும்படியான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் கொடுத்து  வருகிறார்.

அவ்வகையில் இவர் மெர்சல், பிகில் ,தெறி போன்ற சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார் மேலும் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படம் சிறப்பாக வந்துள்ளது என பல சினிமா பிரபலங்கள் கூறிவருகின்றனர் மேலும் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து வருகிறார் விஜய்.

amaithi padai
amaithi padai

இந்த நிலையில் விஜய் அவர்கள் பழைய பேட்டி ஒன்று கொடுத்தது தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியது என்னுடைய கனவு கதாபாத்திரம் ஆனா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு ஆசை அதிலும் குறிப்பாக அமைதிப்படை சத்யராஜ் போல் அனைவரும் ரசிக்கும்படியான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கூறினார்.