சினிமாவில் ஒரு படம் ஹிட் அடிக்க வேண்டும் என்றால் ஹீரோவுக்கு நிகராக ஒரு வலுவான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே அந்த படம் வெற்றி பெறும்.. 70, 80களில் ஹீரோவுக்கு நிகரான வில்லன்கள் பார்க்கப்பட்டனர் ஆனால் தற்பொழுது காலம் மாறிவிட்டது வில்லனுக்கு மதிப்பே இல்லை..
கடைசியாக கூட லியோ படத்தில் சஞ்சயத்தை அர்ஜுன் போன்ற மாஸ் நடிகர்கள் வில்லனாக நடித்திருந்தாலும் ஆனால் படத்தில் அவர்களுடைய காட்சி அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை.. வில்லனுக்கு படங்களில் பவரான வசனமோ அல்லது ஆக்ஷன் கிடையாது ஹீரோதான் எடுத்தவுடனே அடிக்கிறார்..
ஒரு கட்டத்தில் ஹீரோக்களை நடுங்க வைத்த வில்லன்கள் இருக்கிறார்கள் அந்த பட்டியலில் நம்பியார், ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்றவர்களை நாம் என்றுமே மறக்க முடியாது குறிப்பாக பாடி லாங்குவேஜ் மூலம் ஹீரோக்களை கதற விட்ட அவர் ரகுவரன். இந்த நிலையில் தயா பட இயக்குனர் செந்தில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரகுவரனை பற்றி பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.
. தயா படத்தில் பிரகாஷ்ராஜ் லீடு ரோலில் நடிக்க ரகுவரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் பிரகாஷ்ராஜின் ஷார்ட் முடிந்தாலும் அவர் வீட்டிற்கு போக மாட்டாராம் அடுத்த ஷாட் ரகுவரனை வைத்து எடுத்துக் கொண்டிருப்பார்களாம். மறைந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பார் பிரகாஷ் ராஜ் அவர் எப்படி நடிக்கிறார் டயலாக் டெலிவரி எப்படி செய்கிறார்.
என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நோட்டமிட்டு கொண்டே இருப்பாராம் அப்படி ரகுவரன் நடிக்கும் பொழுது அந்த சீனில் வசனமே கிடையாதாம் தலையை மட்டும் அசைத்து தான் என சொல்ல வருகிறேன் என்பதை நடிப்பின் மூலம் வெளிப்படுத்த வேண்டுமாம்..
கேமரா ரகுவரன் முகம் அருகே போக அதே மாதிரி யாரும் எதிர்பார்க்காத ஒரு பர்பாமன்ஸை கொடுத்தாராம் ரகுவரன். மயான அமைதியாக இருந்த ஷாட்டில் தொடையை தட்டியபடி தட்டி தூக்கி விட்டார் தட்டி தூக்கி விட்டார் என்று சொல்லியவாறு பிரகாஷ்ராஜ் ரகுவரன் நடிப்பை பார்த்து மிரண்டு சென்று கொண்டிருந்தாராம்.