வீட்டிற்கு தெரியாமல் சூட்டிங் ஸ்பார்ட்டில் தளபதி விஜய் செய்த தில்லு முல்லு..! அவசரப்பட்டுடிங்களே தலைவா..!

vijay
vijay

தமிழ் திரை உலகில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவர் தன்னுடைய வீட்டிற்கு தெரியாமல் சில தவறுகளை செய்துள்ளதாக அவரே கூறியுள்ளார் இவ்வாறு அவர் கூறிய வீடியோ ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் தன்னுடைய தந்தையின் உதவியை கொண்டு சினிமாவிற்குள் நுழைந்தாலும் தன்னுடைய தனி திறமையின் மூலம் ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டியது மட்டுமல்லாமல் ரசிகர்களின் மீது அக்கறை கொண்ட ஒரு நடிகராகவும் வலம் வருபவர் தளபதி விஜய் தான்.

தளபதி விஜய்க்கு அசைவம் சாப்பிடுவது மிகவும் பிடிக்குமாம் அந்தவகையில் ஒரு நாள் அசைவ சாப்பாடு இல்லை என்றாலும் அந்நாளே அவருக்கு பித்து பிடித்தது போல இருக்குமாம் அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பிடுவது மிகவும் குறைவு.

அந்த வகையில் சென்னையில் படப்பிடிப்பு நடக்கும்போது பிரபல முன்னணி நடிகர்கள் அனைவருக்குமே அவர்கள் வீட்டில் இருந்து உணவு  வந்துவிடும் அந்தவகையில் தளபதி விஜய் வீட்டில் ஒரு கட்டுப்பாடு உள்ளதாம் அதாவது செவ்வாய் மற்றும் வியாழன் கிழமை அவர்கள் வீட்டில் சைவம் மட்டும் தான் சமைப்பார்கள்.

இதனால் தளபதி விஜய் இந்த இரண்டு நாள் மட்டும் சூட்டிங் ஸ்பாட்டில் அசைவம் சாப்பிடுவாராம் இதனை தளபதி விஜய் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இவ்வாறு தளபதி கூறிய இந்த பழைய வீடியோவானது தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

beast
beast