தனது விரும்பிய உணவிற்காக குடும்ப விதிகளை மீறியதை வெளிப்படையாக கூறி ஒட்டுமொத்த ரசிகர்களையும் சிரிக்க வைத்துள்ளார் மாஸ் ஹீரோ விஜய். இவரின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு உலகம் முழுவதும் தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
இவர் அமைதியானவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் நடிப்பு என்று வந்துவிட்டால் இறங்கி அடிப்பார். அந்தவகையில் இவர் சிறந்த நடிப்பு திறமை மற்றும் இயல்பான பேச்சு, நல்ல குணம் போன்றவற்றால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று ஒரு இடம் உருவாக தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தனது சம்பளத்தை இருமடங்காக உயர்த்திவுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் விஜயின் பழைய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் விரும்பிய உணவிற்காக குடும்பத்தின் விதிகளை மீறிவுள்ளதாக கூறி உள்ளார். பொதுவாக விஜய்க்கு அசைவ உணவு தான் ரொம்ப பிடிக்கும் ஆனால் வீட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் சைவ மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று புது ரூல் போடுவார்களாம்.
எனவே விஜய் அந்த இரண்டு நாட்களில் மட்டும் சூட்டிங்கில் அசைவ உணவை சாப்பிட்டு விடுவேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் பொழுது விஜய் ஒரு நாள் கூட அசைவ உணவை விட மாட்டார் என்பது தெரிகிறது. இதனைப் பார்த்த விஜயின் ரசிகர்கள் இதனை வைரலாக்குவதோடு மட்டுமல்லாமல் தனது விரும்பிய உணவிற்காக குடும்ப விதியை மீறியதாகக் கூறி மாஸ் ஹீரோ வெளிப்படையாக பேசியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
விஜய் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அதோட இத்திரைப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார்.
— Vijay Fans Trends (@VijayTrendsPage) July 11, 2021