பொதுவாக பிரபல நடிகர்கள் பொது இடத்திற்குப் போனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம் அந்த வகையில் இன்று ஓட்டு போடுவதற்காக முன்னணி நடிகரான விஜய் வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார்.அங்கு கூட்ட நெரிசல் அதிகமாக ஏற்பட்டதால் மக்களிடம் கையெழுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை உட்பட பல்வேறு மாநகராட்சியில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. எனவே காலை 7 மணி அளவில் இருந்து வாக்கு செலுத்துவதற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் விஜய்யும் தனது வாக்கை பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடிக்கு சென்று உள்ளார்.
விஜய் வருவதை அறிந்த ரசிகர்கள் கேமராவுடனும் பைக்கை எடுத்துக்கொண்டு விஜயின் வீட்டிலிருந்தே அவரின் கார் பின்னாடியே வந்து கொண்டிருக்கிறார்கள். இதன்காரணமாக வாக்குச்சாவடியில் கூட்டநெரிசல் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்பட்டதால் மக்களிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்க வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்களித்தார் தளபதி விஜய் தற்போது சிவப்பு நிற காரில் வந்து வாக்களித்துள்ளார். இதோ அந்த வீடியோ.
#ThalapathyVIJAY at election booth! #Beast #TNLocalBodyElection @actorvijay
— DHFV Bioscope (@DHFV_Off) February 19, 2022
தற்பொழுது விஜய் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதனை தொடர்ந்து தனது 66வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அவரின் 66-வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் உருவாக்கி உள்ளார்கள்.மிகவும் பிரமாண்டமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனா இருவர்களில் ஒருவர் நடிக்க இருக்கிறார்.