தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கும் விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்த நிலையில் இந்த திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அந்த வகையில் விஜயின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை ஜெயசுதா. 70களில் நடிக்க தொடங்கிய இவர் தற்பொழுது வரையிலும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்த வருகிறார் முக்கியமாக தெலுங்கில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு அம்மா ரோலில் நடித்துள்ளார்.
அதேபோன்று வாரிசு திரைப்படத்திலும் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டினர். இவ்வாறு சினிமாவில் மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் தற்பொழுது 62 வயதாகும் நிலையில் இந்த வயதில் மூன்றாவது திருமணம் செய்யப் போகிறார் என்பது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர்.
நடிகை ஜெயசுதா 1985ஆம் ஆண்டு தயாரிப்பாளர் நிதின் கபூர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர்களுக்கு இரண்டு குழந்தையும் இருக்கும் நிலையில் நிதின் கபூர் கடந்த 2017ஆம் ஆண்டு திடீரென தற்கொலை செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சடையை வைத்தது இந்நிலையில் இவருடைய இழப்பிற்கு பிறகு இவர் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது ஜெயசுதா வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை மூன்றாவது திருமணம் செய்யப் போகிறார் என்பது குறித்த செய்தி தற்பொழுது வெளியாகி இருக்கிறது. இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த தகவலை மறுத்த ஜெயசுதா மீண்டும் அவருடன் இருக்கும் புகைப்படத்தால் இவர்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.