இரண்டு இயக்குனர்களை தூக்கி விட்ட தளபதி விஜய்.!! அவர்களுக்காக என்ன பாடு ப்பட்டுள்ளார் பாருங்க.

vijay 231

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர் தனது 65-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது. பொதுவாக விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும்  வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்று விடும்.

எனவே இவரை தமிழ் சினிமாவின் சக்கரவர்த்தி என்று கூறலாம்.இவர் சினிமாவிற்கு வாரிசு நடிகராக அறிமுகம் ஆனாலும் ஆரம்பத்தில் ஓரளவிற்கு சில படங்கள் மட்டுமே வெற்றி தந்தது பல படங்கள் தோல்வியை பெற்றது.

இவ்வாறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து பிறகு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உலகம் முழுவதும் உருவானது. அந்த வகையில் சில வருடங்களாகவே இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்று விடுகிறது.

இந்நிலையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு விஜய் ஒரே நேரத்தில் இரண்டு இயக்குனர்களின் திரைப் படங்களில் நடிப்பதாக கூறிவிட்டு இரண்டு திரைப்படங்களிலும் மாற்றி மாற்றி நடித்து வந்ததால் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார் விஜய்.

அந்த வகையில் ஆரம்ப காலத்தில் வளர்ந்து வரும் இயக்குனர்களான எஸ் கே சூர்யா மற்றும் பாசில் இந்த இரண்டு இயக்குனர்களின் திரைப்படங்களில் தான் நடிப்பதாக ஒப்புக்கொண்டார்.

அந்த வகையில் எஸ் கே சூர்யா இயக்கத்தில் வெளிவந்து திரைப்படம் குஷி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாசில் இயக்கிய இருந்த திரைப்படம் கண்ணுக்குள் நிலவு.

kushi-jyothika
kushi-jyothika

இந்த இரண்டு திரைப்படங்களிலும் நடிப்பதாக விஜய் இரண்டு இயக்குனரிடமும் கால்ஷீட் கொடுத்து விட்டாராம்.  எனவே தான் அப்பொழுது இந்த இரண்டு திரைப் படங்களிலும் நடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

vijay-1-1

இப்படிப்பட்ட நிலையில் இயக்குனர் எஸ் கே சூர்யா இயக்கிய குஷி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது. ஆனால் பாசில் இயக்கிய கண்ணுக்குள்  திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.