ரூ.100 கோடி சம்பளம் போதும்.. ஆனால் லாபத்தில் பங்கு வேண்டும்.. தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் விஜய்.!

vijay
vijay

Thalapathy Vijay: நடிகர் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கும் நிலையில் இவர் தனது படத்தின் வெற்றி பிறகு தயாரிப்பாளரிடம் லாபத்தில் பங்கு கேட்டதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். லியோ படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிலையில் விரைவில் வெளியாக இருக்கிறது மேலும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருக்கிறது.

எனவே இதற்காக படக்குழுவினர்கள் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட இருக்கும் நிலையில் லியோ படத்தின் ரிலீஸ்க்கு பிறகு தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 68வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரியங்கா மோகன், ஜோதிகா, மாதவன் மற்றும் பிரபுதேவா உள்ளிட் அவர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தளபதி 68 படத்திற்காக ரூபாய் 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

லியோ படத்தில் நடித்ததற்காக ரூபாய் 125 கோடி சம்பளம் வாங்கினாராம் அதிலிருந்து ரூபாய் 75 கோடி அதிகமாக ஏஜிஎஸ் நிறுவனத்திடம் விஜய் ஏன் வாங்கினார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் முதலில் நடிகர் விஜய் எனக்கு இந்த படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 100 கோடி சம்பளம் கொடுங்க மேலும் இந்த படத்தில் வரும் லாபத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டதனால் தயாரிப்பாளர் அதிர்ச்சடைந்துள்ளாராம்.

எனவே இதன் காரணமாக லாபத்தில் பங்கு கொடுக்க முடியாது என்ற காரணத்தினால் தான் ரூபாய் 200 கோடி சம்பளம் தர விஜய்க்கு ஏஜிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு விஜய்யும் ஓகே சொல்ல தளபதி 68 படத்திற்கு விஜய் 600 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.