தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் சாதனை படைத்த விஜய்யின் தெறி.!

theri
theri

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். பொதுவாக இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் வசூல் ரீதியாக எப்பொழுதும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விடும்.

இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பதால் இவர் நடிப்பில் வரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் பொங்கலை முன்னிட்டு விஜய் மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர்.

இத்திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அந்த வகையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.  தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற திரைப்படம் தெறி. இத்திரைப்படத்தில் சமந்தா, ராதிகா உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து இருந்தார்கள்.

தமிழில் இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்தியில் டப் செய்யப்பட்டது. அந்தவகையில் இத்திரைப்படத்தை ஹிந்தி யூடியூப்  சேனலில் வெளியிட்டிருந்தார்கள். அந்தவகையில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு திரைப்படம் 350 மில்லியன் வியுவ்ஸ்களை பெற்றுள்ளதாம்.