தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் விஜய்க்கு அண்ணியாக என்னால் நடிக்க முடியாது.! தளபதி 68 படத்தில் நடிக்கும் நடிகை..

thalapathy 68
thalapathy 68

Thalapathy 68: விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படத்தில் தளபதி விஜய் அண்ணியாக நடிக்க மறுத்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படத்தினை தொடர்ந்து தனது 68வது படத்தில் விஜய் நடிக்க வருகிறார். இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்க படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் கூடிய டைட்டில் வெளியானது.

டேய் தம்பி வீடியோவா எடுக்கிற அத கொஞ்சம் குடு பாப்போம்.! டெலிட் செய்துவிட்டு மொபைலை கொடுத்த அஜித்..

அதன்படி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் அதை சுருக்கமாக கோட் என டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தில் விஜய் அப்பா-மகன் என இரட்டை கேரக்டரில் நடிப்பதற்கான போஸ்டர் வெளியாகி உறுதியானது. கோட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்து வருகிறார்.

இவர்களுடைய கூட்டணியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு வசீகரா படம் வெளியானது இதில் சினேகா, விஜய் இணைந்து நடித்திருந்தனர். தற்பொழுது நீண்ட  இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இவர்கள் ஜோடி சேர்ந்துள்ளார்கள். அந்த வகையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கோட் படத்தில் நடிக்கும் மகிழ்ச்சியை தெரிவித்தார் சினேகா.

டேய் தம்பி வீடியோவா எடுக்கிற அத கொஞ்சம் குடு பாப்போம்.! டெலிட் செய்துவிட்டு மொபைலை கொடுத்த அஜித்..

மேலும் சினேகாவின் கணவரும் நடிகருமான பிரசன்னா பேசிய பொழுது வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணியாக நடிப்பதற்கு சினேகாவிற்கு அழைப்பு வந்தது ஆனால் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சினேகா மறுத்துவிட்டார். அது நல்ல முடிவு என்று நான் அப்பொழுதே பாராட்டினேன் அப்போ அந்த முடிவை எடுத்ததால் தான் இப்பொழுது விஜய்க்கு மீண்டும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.