பொதுவாக சினிமாவில் பிரபலமடைந்த பலர் தங்களது வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி எளிதில் பிரபலமடைய செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.அந்த வகையில் விக்ரம் ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் தனது மகனும் துருவை அறிமுகம் செய்து தற்போது உள்ள இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார்.
தற்போது நடிகர் விக்ரமை தொடர்ந்து தளபதி விஜய் தனது மகனை ஹீரோவாக அறிமுகம் செய்ய உள்ளாராம். ஏற்கனவே வேட்டைக்காரன் திரைப்படத்தில் சிறு வயது பையனாக அறிமுகம் செய்தார். தற்பொழுது படங்களில் ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளாரம்.
அந்த வகையில் தற்பொழுது விஜய் தன்னுடைய மகனை வைத்து ஒரு படத்தை தயாரிக்கலாம் என்று யோசித்து வருகிறாராம். நடிகர் விஜய் படம் தயாரிப்பாரோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக தன் மகனை சஞ்சயை ஹீரோவா நடிக்க வைப்பார் என்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கில் வெளியாகி மூன்றே நாட்களில் 50 கோடி வசூலித்து சாதனை பெற்ற உப்பணா திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளார்களாம். இப்படத்தை விஜய் சேதுபதிதான் வாங்கி உள்ளார் என்று தகவல் தெரியவந்துள்ளது.
உப்பணா திரைப்படத்தை விஜய் பார்த்ததும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம்.எனவே இப்படத்தின் மூலம் தன் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்தாள் சிறப்பாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளாராம்.
இப்படத்தை விஜய் தயாரிக்கலாம் என்றும் யோசித்து வருகிறாராம்.படத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தி நல்ல இயக்குனர் ஒருவரை தேர்ந்தெடுத்து தயாரிக்கவுள்ளாராம்.அதுமட்டுமல்லாமல் சஞ்சய்யை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்து வருகிறார்களாம்.