தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் டிஆர்பி-யில் முன்னணி வைக்க வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் முன்னணி தொலைக்காட்சிகளாக சன் டிவி மற்றும் விஜய் டிவி விளங்குகிறது. ஆரம்ப காலகட்டத்தில் சன் டிவி தொடர்ந்து டிஆர்பி முன்னணி வகித்து வந்தது.
பிறகு வெள்ளித்திரையில் இருந்து வாய்ப்பு கிடைக்காமல் வந்த நடிகர் நடிகைகளை வைத்து சீரியல்களை ஒளிபரப்பி வந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது.பிறகு இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட விஜய் டிவி இளம் நடிகர் நடிகைகளை வைத்து காதல் காட்சிகள் இடம் பெறும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வந்ததால் ஒட்டுமொத்த தொலைக்காட்சிகளையும் ஓவர்டேக் செய்த டிஆர்பி முன்னணி வகித்தது.
இதனை புரிந்துகொண்ட சன் டிவி பிறகு விஜய் டிவி போலவே ஏராளமான சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கினார்கள் தற்பொழுது இந்த இரண்டு சேனல்களும் டிஆர்பி-யில் அதிக அளவில் முதல் இடத்தைப் பிடித்து வருகிறது. அதிலும் அதிகமாக விஜய் டிவி முதலிடத்தை பிடித்து வருவதால் அதனை உடைக்கும் வகையில் தற்போது தளபதி விஜய்யை களமிறக்கி உள்ளார்கள்.
அதாவது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ள விஜய் கிட்டத்தட்ட சுமார் 10 வருடங்களுக்கு பிறகு சன் டிவியில் பேட்டி அளிக்க உள்ளார். விஜய் அளித்துள்ள இந்த பேட்டியில் தொகுப்பாளராக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பங்கு பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் கலந்துரையாடும் இந்நிகழ்ச்சி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடக்க இருக்கிறது.
வருகிற 10ஆம் தேதி அன்று சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் அதிலிருந்து வெளிவந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.இந்தப் பேட்டிக்கு 7 செகண்டுக்கு 7 லட்சம் சம்பளமாக விஜய் பெற்றுள்ளாராம். சன்டிவி தற்பொழுது கோடிகோடியாக சம்பாதித்து விடலாம் என்று முடிவு செய்துள்ளது.
எனவே இதனை வைத்துப் பார்க்கும் பொழுது விஜய் டிவியின் டிஆர்பியை அடித்து நொறுக்கி சன் டிவி முதலிடத்தை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னென்றால் ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகி உள்ள நிலையில் இந்த பேட்டிக்காக அனைவரும் காத்து வருகிறார்கள்.