ஹீரோவாக அறிமுகமாகும் விஜயின் மகன்.!! அதுவும் 3 நாளில் 50 கோடி வசூல் செய்த ரீமேக் திரைபடத்தில்..

vijay
vijay

தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். இவரின் மகன் சஞ்சய் விரைவில் தெலுங்கு பட ரீமேக்கில் தமிழில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

சஞ்சய் கனடாவில் சினிமா இயக்கம் பற்றிய படிப்பை தான் படித்து உள்ளார்.எனவே தளபதி நடிப்பில் உருவாகவுள்ள 66வது திரைப்படத்தை இவர் தான் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்பொழுது விஜய் தன் மகன் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தெலுங்கில் ரிலீசாகி மூன்றே நாட்களில் 50 கோடி வசூலித்த திரைப்படம் உப்பண்ணா. இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தன் மகனை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார் என்று விஜயின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறார்கள்.

uppenna
uppenna

தெலுங்கில் வெளியான உப்பண்ணா திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி கலக்கியிருந்தார்.எனவே இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கு இவர் தான் வாங்கி உள்ளார் என்றும் இப்படத்தை இவர் தான் தயாரிக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

இதனைப் பற்றிய அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்று காத்துத்திருக்கலாம்.