தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடைய மகனை தற்பொழுது நடிகராக அறிமுகம் செய்ய மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.
சஞ்சய் கனடாவில் படம் இயக்குவதற்கான படிப்பை தான் படித்துள்ளார். எனவே சஞ்சய் இயக்குனராக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது தெலுங்கு ரீமேக் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் சமூக தளத்தில் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர்.இவர் ரஜினி, விஜயகாந்த் ஆகியோர்களை வைத்து சமூகத்திற்கு ஏற்ற நல்ல திரைப்படங்களை ஆரம்பத்தில் இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தார்.
நடிகர் விஜய்யும் தனது அப்பா மூலம் தான் சினிமாவில் விரைவில் பிரபலமடைந்தார். அது மட்டுமல்லாமல் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் தான் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் விஜய் தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்நிலையில் தற்பொழுது இவர் இயக்கும் படங்களில் அதிகமாக கவர்ச்சி இருப்பதால் பலர் இவரை வெறுத்து வருகிறார்கள். அந்தவகையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த கேப்மாரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய விமர்சனத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இத்திரைப்படத்தில் ஜெய் ஹீரோவாகவும் இவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி அடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் கேப்மாரி 2 திரைப்படத்தை இயக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்.
இப்படத்தில் எப்படியாவது தனது பேரனை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளாராம் ஆனால் விஜய் இப்படத்தில் சஞ்சய் நடிக்க மறுத்துவிட்டார். எனவே வேறு படத்திலாவது கண்டிப்பாக தனது பெரனை வைத்து ஒரு படமாவது எடுக்க வேண்டும் என்று முடிவோடு இருக்கிறாராம் எஸ்.ஏ சந்திரசேகர்.