கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கொரோனா என்ற ஒரு பெரும் தொற்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்தத் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவை ஒரு பதம் பார்த்து வருகிறது. அதுவும் முக்கியமாக இந்தியாவிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது தமிழ்நாடு.
இது ஒரு பக்கம் நம் அனைவரையும் ஆட்டிப் படைத்து வர மற்றொரு பக்கம் பசியும் பட்டினியும் ஏழைகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்காக சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்று பலரும் ஏழை மக்களுக்கு தங்களால் முடிந்த உணவுகளை நாள்தோறும் அளித்து வருகிறார்கள்.
கொரோனாவின் இரண்டாவுது அலைக்கே இப்படி அவதிப்பட்டு வரும் நிலையில் மருத்துவர்கள் கண்டிப்பாக மூன்றாவது அலையும் இருக்கும் என்று கூறியுள்ளார்கள். இதனால் மக்களும் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிப்பதற்காக, கொரோனா தோற்றை பரவாமல் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நன்கொடை வழங்குமாறு கேட்டு வருகிறார்.
எனவே தற்போது உள்ள பல திரை பிரபலங்களும் முதலமைச்சரை நேரில் சந்தித்து லட்சகணக்கில் கொரோனா நிதி உதவி வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் சூர்யா, விஜய்,அஜித், சிவகார்த்திகேயன், ரஜினி உள்ளிட்ட இன்னும் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் நிதி உதவி வழங்கி உள்ளார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது விஜய் சேதுபதியும் 25 லட்சம் கொரோனா நிதி உதவி வழங்கி உள்ளார். இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.