சினிமா உலகில் ஹீரோ கதாபாத்திரத்தை தான் மக்கள் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் என்ற காலம்மாறி போயுள்ளது அண்மை காலமாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் காமெடியன், குணச்சித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல், வில்லன் போன்றவரில் நடிப்பையும் ரசிக்க ஆரம்பிக்கின்றனர்.
அதை நன்கு உணர்ந்து கொண்ட விஜய் சேதுபதி தமிழ் சினிமா உலகையும் தாண்டி மற்ற மொழிகளிலும் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோலில் என எதுவாக இருந்தாலும் அந்த கதாபாத்திரம் சிறப்பாக இருந்தால் தயங்காமல் நடித்து வெற்றி கண்டு வருகிறது. அந்த வகையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டியிருந்தார்.
அது விஜய் சேதுபதிக்கு வேற லெவலில் பெயரை பெற்றுத்தந்தது அதனைத் தொடர்ந்து இப்போது ஹீரோவாக நடித்துள்ளார் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் நன்றாகவே அள்ளி வருகிறது.
இந்த படம் வெளிவருவதற்கு முன்பாக பல்வேறு பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் அப்பொழுது பேட்டி ஒன்றில் இவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது என்ன செய்வீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் நான் முதலில் தூங்க நினைப்பேன் என கூறினார். வரவில்லை என்றால் புகை பிடிப்பேன் அதுவும் இல்லையென்றால் ஒருகட்டத்தில் சரக்கடித்துவிட்டு படுத்து விடுவேன் என கூறியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி அவ்வாறு சொன்னது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து.