எத்தனை திரைப்படத்தில் நடித்தாலும் இது போன்ற இரண்டு படத்தில் மீண்டும் நடிக்க விரும்பும் விஜய் சேதுபதி.!

vijay sethupathi2
vijay sethupathi2

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் கிடைக்கும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவர் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவ்வாறு சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பெற்றுள்ள இவர் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதாவது விஜய் சேதுபதி எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர் நடித்த இரண்டு திரைப்படங்கள் மிகவும் அவருக்கு பிடித்ததாம் மேலும் அது போன்ற கேரக்டரில் மீண்டும் நடிக்க வேண்டும் என விரும்பி வருகிறார்கள் என சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விஜய் சேதுபதி இந்த சினிமாவில் தற்பொழுது வளர்ந்துள்ளதற்கு இந்த இரண்டும் திரைப்படங்கள் தான் முக்கிய காரணம் இந்த படங்கள் தான் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்: தரணிதரன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் இவருக்கு ஜோடியாக நடிகை காயத்திரி அவர்கள் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று தந்தது. மேலும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்ட இந்த இந்தத் திரைப்படத்தின் கதை மற்றும் விஜய் சேதுபதியின் எதார்த்த நடிப்பு,காமெடி போன்றவை வைரலானது மேலும் திருமண மேடையில் நடிகையை பார்த்து ஓவர் மேக்கப் டா எப்பா சாமி என்ன பண்ணுடா என்ற வசனம் மிகப்பெரிய ரீட்சை பெற்றது.

இவ்வாறு காமெடி கலாட்டா நிறைந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்க விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது ஆனால் சமீப காலங்களாக வில்லனாகவும் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.

சூது கவ்வும்: விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரமேஷ் திலக் ஆகியோர்களின் கூட்டணியில் நலன் குப்புசாமி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கதை கலத்தை உடையதாக வெளியானது. மேலும் 2 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவான இந்த திரைப்படம் 36 கோடி வசூல் செய்து வசூல் செய்தியாக வேண்டும் விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்றது.

இந்த திரைப்படத்தின் வெற்றியின் காரணமாக தான் தமிழ் சினிமாவில் இவர் முக்கிய நடிகராக வருவதற்கான அந்தஸ்தை பெற்றார் மேலும் இவ்வாறு இது போன்ற கதை உள்ள திரைப்படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறப்படுகிறது.