இளம் நடிகையுடன் ஜோடி சேரும் நடிகர் விஜய் சேதுபதி.! யார் தெரியுமா.?

vijay-sethupathy-

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலைகள் தற்போது இவருடைய நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் உருவாகி வரும் நிலையில் விரைவில் சூரிவுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்து வரும் விடுதலை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும், சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்து கலக்கி வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக நடிகர் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவ்வாறு தமிழ் மட்டுமல்லாமல் தொடர்ந்து மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் இளம் நடிகை முதன்முறையாக கமிட்டாகி இருக்கும் நிலையில் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக மைக்கேல் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

deepshika
deepshika

இவ்வாறு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்கான பிரபலங்கள் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான தீப்ஷிகா நடிக்க இருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அளவிலிருந்து வருகிறது அந்த வகையில் விரைவில் இந்த படத்தினை பற்றி அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் விரைவில் அந்த திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.