தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராகவும் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவர் தமிழ் மொழி மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் தற்போது திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
அந்தவகையில் நான் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என கர்வம் கொள்ளாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவர் பேட்டை திரைப்படத்தில் கூட ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் தளபதியின் மாஸ்டர் திரைப்படத்தில் கூட விஜய்க்கு வில்லனாக நடித்து இருப்பார். மேலும் வருடத்திற்கு ஒரு திரைப்படத்தில் மட்டும் கதாநாயகனாக நடித்து வந்த நமது நடிகர் தற்போது வருடத்திற்கு பத்து திரைப்படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார்.
ஆனால் இவர் தற்போது நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே சரியான கதையம்சம் இல்லாததன் காரணமாக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இதன் காரணமாகவே வெப்தொடர் பக்கம் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார் நமது நடிகர்.
இந்நிலையில் இந்த வெப் தொடரில் அவருக்கு கதாநாயகியாக நடிகை ராசி கண்ணா நடிக்க வேண்டும் என விஜய்சேதுபதி பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி துக்ளக் தர்பார் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ராசி கண்ணா உடன் இணைந்து நடித்துள்ளார்.
இவ்வாறு வெளிவந்த செய்தி மிகவும் தவறானது என கூறப்படுகிறது ஏனெனில் விஜய்சேதுபதி தரப்பிலிருந்து ராஷ்மிகா மந்தனா விற்கு சிபாரிசு செய்யவில்லை இயக்குனர்தான் ராசி தேர்வு செய்துள்ளார் என கூறப்படுகிறது.