‘சூது கவ்வும் 2’ படத்தில் விஜய் சேதுபதிக்கு டஃப் கொடுக்க பிரப நடிகரை களம் இறக்கம் இயக்குனர்.! தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..

suthu kavvum
suthu kavvum

ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த காரணத்தினால் அந்த படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருவது வழக்கம் அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் சூது கவ்வும். இந்த படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றினை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது பிரபல இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் சூது கவ்வும் படத்திற்கு திருக்குமரன் நிறுவனத்தின் சிவி குமார் தயாரிப்பில் சந்தோஷ், நாராயணன் இசையமைப்பில் சுமார் 2 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூபாய் 35 கோடி வரை வசூல் செய்து சாதனையை படைத்தது.

மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் இந்த படத்தின் காட்சிகள் அமைந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்து வந்த நிலையில் தற்பொழுது சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சமீப பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் சிவி குமார் சூது கவ்வும் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என தெரிவித்தார். இந்நிலையில் தற்பொழுது வந்திருக்கும் தகவலின் படி சூது கவ்வும் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா நடிக்க இருப்பதாகவும் தற்பொழுது அவரது கேரக்டரை டெவலப் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இயக்குனர் நலன் குமாரசாமி நடிகர் கார்த்திக் வைத்து படம் ஒன்று இயக்க உள்ளார் இது குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்த படப்பிடிப்புகளை முடித்துவிட்டு சூது கவ்வும் படத்தின் இரண்டாவது பாகத்தினை இயக்குனர் எதிர்பார்க்கப்படுகிறது.