தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி இவர் ஹீரோவாக அறிமுகமாகி பிறகு தற்போது வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி தனது சிறந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கிட்டத்தட்ட பத்து படங்கள் இவர் நடிப்பில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள புதிய படமொன்றில் விஜய்சேதுபதி நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இத்திரைப்படத்தை பொன்ராம் இயக்குகிறார். பொதுவாக சன் பிக்சர்ஸ் பல கோடி பட்ஜெட்டில் பல முன்னணி நடிகைகளை வைத்து படங்களை உருவாக்கி வருகிறது. அந்தவகையில் தற்போது விஜய்சேதுபதி மற்றும் போன் ராமன் கூட்டமைப்பில் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மிஸ் இந்தியா அழகி அனுகீர்த்தி வாஸ் நடிக்கவுள்ளாராம். அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதியை வைத்து சன் பிக்சர்ஸ் சமையல் ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு இவரின் மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிற என்றுதான் கூற வேண்டும்.