AK62 படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கிறாரா.! ரசிகர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்த நடிகர்..

vijay sethupathi new movie
vijay sethupathi new movie

தமிழ் திரையுலகில் சீனுராமசாமி இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் தான் விஜய் சேதுபதி, அதன்பிறகு பல்வேறு படங்களை நடித்து தற்போது வெளி மாநிலங்களிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

விஜய் சேதுபதி, மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து படிப்படியாக முன்னேறிய இவர் தற்பொழுது ஒரு படத்திற்கு 3 கோடி சம்பளம் வாங்குகிறார், ஜெஸ்ஸி என்பவரை ஆன்லைனில் காதலித்து கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், இவரது நடிப்பில் வெளியான “விக்ரம் வேதா” என்னும் திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் ஒன்று.

அதன் பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் பவானி என்னும் கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருப்பார்.இந்தநிலையில் தற்பொழுது நடந்த ஒரு மீட்டிங்கில் விஜய் சேதுபதியிடம் ரசிகர் ஒருவர் ஏகே 62 படத்தில் நீங்கள் தான் வில்லனா என்று கேள்வி எழுப்பியுள்ளார் அதற்கு விஜய் சேதுபதி இதே கேள்வியை நானும் விக்னேஷ் சிவனிடம் கேட்டேன் அதற்கு அவர் “நீங்கள் என்னுடைய ஹீரோ நான் உங்களை வில்லனாகப் பார்க்க மாட்டேன்” என்று கூறியதாக கூறினார்.

இதை வைத்தே ஏகே 62 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க மாட்டார் என்பதை உறுதி செய்துவிடலாம். தல அஜித்குமார் ஒரு படத்திற்கு 105 கோடி சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று, இந்த தகவல் மிகவும் பிரபலமான டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.